மிட்டாய் கவிதைகள்!

மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)

July 20, 2013

manitha kurangu

எவனோ ஒருவன் உண்ணவிருந்த
பழமொன்றை எங்கிருந்தோ வந்த
குரங்கொன்று கவ்விச் சென்று,
எட்ட முடியா உயரத்தில்
உட்கார்ந்து கொண்டு,,
சிறிதாய்த் தெரியும்
நம்மைப் பார்த்துச் சிரிக்கும்!

அதைப்போலவே,
எவனோ ஒருவன் கொள்ளவிருந்த
கொஞ்சம் பணத்தையும்
முகம் தெரியா ஒருவன்
அபகரித்து விட்டு எட்ட முடியா
அரியணையில் ஏறி அமர்வான்..
அவன் மட்டும் மேலே உயர்வான்
மற்றவர்கள் எதிர் திசையில்!
இவர்கள் தவறு செய்யவில்லை!
குரங்கிலிருந்து தோன்றிய பின்னர்
ஆறாம் அறிவை வாங்க மறந்தவர்கள்!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்